மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் மகாத்மாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தேசப்பிதாவின் புகழைப் பறைசாற்றும் வகையில் கலைஞர்கள் பஜனைப் பாடல்களை பாடினர். இதைத் தொடர்ந்து குஜராத் செல்லும் பிரதமர், அங்கு காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
இதைத் தொடர்ந்து நாட்டை திறந்த வெளி கழிப்பிடங்கள் அற்றதாக அவர் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?