பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான கார்.. கல்லூரி மாணவரிடம் விசாரணை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை ராயபுரத்தில் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார், பெட்ரோல் பங்கில் புகுந்து விபத்துக்குள்ளானது.


Advertisement

சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேற்றிரவு ஏராளமான பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கில் புகுந்து விபத்திற்குள்ளானது. கார் பெட்ரோல் பங்கில் வேகமாக புகுந்ததால் அங்கு பெட்ரோல் போட வந்த பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.


Advertisement

கார் மோதியதில் பெட்ரோல் பங்க் அலுவலகமும் சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு போக்குவரத்து போலீசார், காரில் இருந்து இறங்கிய வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த விசாரணையில், காரை ஓட்டி வந்தது, அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் சபீர் உசேன் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசாரிடம் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement