நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த டிராபிக் ராமசாமி திரைப்படம் ஓராண்டுக்கு முன் திரைக்கு வந்தது. இந்த படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை 3 கோடி ரூபாய்க்கு தருவதாகக் கூறி, கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம் முன்பணமாக 21 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் சில நாட்கள் கழித்து இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே வெளியிட இருப்பதாகவும், அதனால் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாகவும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து பணத்தை திருப்பி தராமல் அலைக்கழிப்பதோடு, கொலை மிரட்டல் விடுவதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பில் மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிமாறன், “ எஸ்.ஏ சந்திரசேகரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி அளிக்க முடியாது எனக்கூறி எனக்கும் எனது நண்பரான பிரமானந்தம் சுப்பிரமணியத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்."அரசாங்கத்தையே அலறவைப்பவர்கள் நாங்கள் என உனக்கு தெரியாதா?” எனக் கேட்பதாகவும் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?