கோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை குண்டு வெடிப்பு வழக்கில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


Advertisement

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 168 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில், தண்டனைக் காலம் முடிந்து பலர், விடுதலையாகி உள்ளனர். இதில் 16 பேர் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.


Advertisement

இதேபோல மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக், அயூப் என்ற அஷ்ரப் அலி ஆகியோரும் கைது செய்யப்படவில்லை. மேற்கண்ட நான்கு பேரும், காவல்துறையினர் பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர். மேற்கண்ட 4 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால், ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும். தகவல் அளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் எண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement