[X] Close >

டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

What-are-the-measures-took-to-control-Dengue--Chennai-HC-asks-report-from-TN-govt

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது பொதுமக்களின் சமூக பொறுப்பு என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து ‌மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


Advertisement

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் ‌என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சுகாதாரத்துறை சார்ந்த நிபுணர்கள் குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும் கோரிக்கை விடுத்திருந்தார்.


Advertisement

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் அடியில் தேங்கியிருக்கும் நீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் குற்றம்சாட்டினார். அதற்கு நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கட்டாய ஹெல்மெட், பிளாஸ்டிக் தடை என அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை நாம்தான் மதித்து நடக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூக பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினர்.

டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close