தற்போதைய உலகில் ஆண்ட்ராய்ட், ஐபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த போன்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதனால், இந்த வகை போன்களை வைத்திருப்பவர்கள் மிகவும் பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆண்ட்ராய்ட் வகை போன்களை கீழே விழுந்து உடைந்தால் கூட சரிசெய்து கொள்ளலாம். ஆனால், தண்ணீரில் விழுந்தால் அவ்வளவுதான். லேசாக தண்ணீரில் பட்டாலே அதனை உடனடியாக துடைத்துவிடுவார்கள். கொஞ்சம் அதிகம் தண்ணீரில் நனைந்துவிட்டால் செல்போனை பிரித்து காய வைத்துவிடுவார்கள். அதிக நேரம் தண்ணீரில் இருந்த போன்கள் தேறுவது சிரமம்தான்.
ஆனால், தண்ணீருக்குள் தவறி விழுந்த செல்போன் 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. இதில் அதிசயம் என்னவென்றால் அந்த செல்போன் மீண்டும் இயங்கியுள்ளது. இது ஒரு சுவாரஸ்யமான கதை. மைக்கேல் பென்னெட் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றினை நடத்தி வருகிறார். அந்த யூடியூப் சேனலில் தண்ணீருக்கு அடியில் கிடைக்கும் அரிய வகை பொருட்கள் குறித்த வீடியோ பதிவுகளை அடிக்கடி பதிவிடுவார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள எடிஸ்டோ ஆற்றில் சமீபத்தில் தன்னுடைய தேடும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது,தண்ணீருக்கு அடியில் இருந்து ஐபோன் ஒன்றினை கண்டறிந்துள்ளார். அந்த போன் எத்தனை நாட்கள் அந்தத் தண்ணீர் இருந்திருக்கும், இது வேலை செய்யுமா? செய்யாதா? என குழப்பத்துடன் அந்த போனை எடுத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்று அந்த போனிற்கு சார்ஜ் போட்டிருக்கிறார். என்ன ஆச்சர்யம் அந்த போன் வேலை செய்திருக்கிறது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை. உடனே, அந்த போனை எப்படியாவது உரிய நபரிடம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். ஆனால், அங்குதான் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த செல்போனை இயக்க பாஸ்வேர்டு கேட்கிறது. அந்த போனின் உரிமையாளர் எல்லாவற்றிற்கும் பாஸ்வேர்டு வைத்திருக்கிறார். அதனால், மாற்று வழியினை யோசித்துள்ளார் மைக்கேல்.
உடனடியாக செல்போனில் இருந்து சிம்கார்டை வெளியே எடுத்து வேறொரு போனில் பயன்படுத்தியுள்ளார். அதன் மூலம் எப்படியோ உரிமையாளரின் தொடர்பு எண்ணை கண்டுபிடித்து, இந்தத் தகவலையும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை கேட்டதும் செல்போனின் உரிமையாளர் எரிக்கா பென்னட் என்பவருக்கு ஒரே ஆச்சர்யம். அப்போது, தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது அந்த ஆற்றில் செல்போன் தவறிவிழுந்துவிட்டதாக மைக்கலிடம் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 15 மாதங்களாக அந்த செல்போன் தண்ணீருக்கு இருந்தது என்ற தகவல் அப்போதுதான் மைக்கலுக்கு தெரியவந்தது.
செல்போன் கிடைத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எரிக்கா, அந்த போன் தவறியதால் தான் அடைந்த சோகத்தையும் வெளிப்படுத்தினார். இறந்துபோன தன்னுடைய தந்தை குறித்த தகவல்கள் அனைத்து அந்த ஐபோனில்தான் இருந்ததாக அவர் கூறினார். ‘என்னுடைய தந்தை உடனான உரையாடல்கள் அனைத்தும் விலைமதிப்பில்லாதது’ என்று கூறினார் எரிக்கா. உடனடியாக அதில் இருந்த தகவல்கள் அனைத்தையும் தன்னுடைய புதிய போனிற்கு மாற்றியுள்ளார்.
இந்த செல்போன் வாட்டர் ஃபுரூப் கொண்டது. அதனால்தான் 15 மாதங்கள் தண்ணீருக்கு அடியில் எதுவும் ஆகாமல் இருந்துள்ளது. இந்த சுவாரஸ்யமான கதையை பலரும் நெகிழ்ச்சியாக ஷேர் செய்து வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!