‘தர்பார் சாஹிப்’ குருத்வாரா திறப்புவிழா - மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் அழைப்பு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குருநானக் நினைவாக பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருக்கும் ‘தர்பார் சாஹிப்’ குருத்வாராவிற்கு இந்தியாவிலிருந்து செல்லும் வழித்தட திறப்புவிழாவிற்கு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.


Advertisement

சீக்கிய மதத்தை தோற்றவித்த குருநானக், இறுதிக் காலகட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ராவி நதிக்கரையில் உள்ள கர்தார்பூரில் ‘தர்பார் சாஹிப்’ என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ள இந்தியாவின் குருதாஸ்பூரையும் - பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இணைக்க சாலை அமைக்கப்பட்டு வருகிறது.


Advertisement

இதுதொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கர்தார்பூர் வழித்தட திட்டத்துக்கான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் அட்டாரியில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹமத் குரேஷி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்தார்பூரில் நடக்கவிருக்கும் திறப்பு விழா பிரம்மாண்டமானது. இதற்காக பாகிஸ்தான் பெரிய பாதையை அமைத்துள்ளது. இந்த விழாவிற்கு நாங்கள் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக அவருக்கு விரைவில் முறையான கடிதம் அனுப்புவோம். அத்துடன் குருநானக்கின் 550வது பிறந்த நாள் விழாவிற்கு வருகை தர நினைக்கும் அனைத்து சீக்கியத் தலைவர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்” எனக் கூறியுள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement