JUST IN

Advertisement

இந்திய பங்குச் சந்தை : சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச் சந்தை மதிப்புகளான சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சியடைந்துள்ளன.


Advertisement

இந்திய பங்குச் சந்தை மதிப்பீடுகள் கடந்த வாரத்தில் பெரும் வளர்ச்சியை கண்டன. அது நான்கு மாதங்களில் இல்லாத வளர்ச்சி எனப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 

இந்நிலையில் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை மதிப்பீடான சென்செக்ஸ் 155 புள்ளிகள் அல்லது 0.40% சரிவடைந்து 38,667 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.


Advertisement

தேசிய பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி 35 புள்ளிகள் அல்லது 0.31% சரிந்து 11,477.25 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தக நாளில் அசோக் லேலாண்ட், ஹீரோ கார், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களில் புள்ளிகள் சரிவை சந்தித்தன. அத்துடன் ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளின் புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement