[X] Close >

ஆதரவும், எதிர்ப்பும்: பிரதமர் வருகைக்கு ட்ரெண்ட் செய்யப்படும் ஹேஸ்டேக்குகள்!

Twitter-hasgtags-about-PM-modi-TN-visit

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன


Advertisement

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் மோடிக்கு பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Advertisement

பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐஐடி சென்றார். அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,  இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய மோடி தமிழர்களின் உணவு குறித்தும், விருந்தோம்பல் குறித்தும் பேசினார்.

இந்நிலையில் பிரதமரின் வருகை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பிரதமரின் வருகைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. #gobackmodi, #TNWelcomesModi ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close