“அந்த ஸ்டைலில் பந்துவீசுவதுதான் பும்ராவுக்கு பிரச்னையா?” - நெஹ்ரா விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீசும் ஸ்டைல் அவரது முதுகு வலிக்கு காரணமல்ல என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.


Advertisement

இந்திய அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக ஜஸ்பிரிட் பும்ரா திகழ்ந்து வருகிறது. தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். உலகக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இருப்பினும், முதுகுவலி காரணமாக தென்னாப்ரிக்கா மற்றும் பங்களாதேஷ் தொடரில் அவர் இடம்பெறவில்லை. தற்போது, இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்குமாறு அவருக்கு மருத்துவர்கள் அறியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பும்ரா ஏற்பட்டுள்ள முதுகு வலி குறித்து ஆஷிஸ் நெஹ்ரா பேசியுள்ளார். “அவருக்கு ஏற்பட்டுள்ள வலிக்கும், அவரது பந்துவீசும் முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அவரது பந்துவீசும் ஸ்டைலினை மாற்றிக்கொள்ளக் கூடாது. அப்படி மாற்றினால், சிறப்பாக பந்துவீச முடியாது. அவர் திரும்பி வந்தவுடன், பழையபடியே பந்துவீசுவார். அதே, வேகத்துடன், அதே தீவிரத்துடன் பந்துவீசுவார். அவரது வலி குறைய இரண்டு மாதங்கள் ஆகும். மேற்கொண்டு சில மாதங்கள் கூட ஆகலாம்” என்று அவர் கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement