விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஓபிஎஸ் நிதியுதவி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரு‌பவர்களையும் துணை முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் சந்தித்து, நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார்.


Advertisement

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் வெள்ளியன்று சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்ததோடு, சிலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பெரியகுளம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 


Advertisement

இந்நிலையில் பெரியகுளம் வந்த துணை முதல்வர் ‌ஓ.பன்னீர்செல்வம், இவ்விரு மருத்துவமனைகளுக்கும் சென்று 10 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறி, நிதி உதவி அளித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மஞ்சளார் கிராமத்தில் சந்தித்து ஆறுதல் கூறி‌ய ஓ.பன்னீர்செல்வம், அவர்களுக்கும் நிதி உதவி வழங்கினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement