இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை, தங்களது ஆர்ப்பிட்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. அதன்படி, நாசாவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் தரையிரங்கியதாக கூறப்படும் இடத்தை புகைப்படம் எடுத்துள்ளது.
இதனை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் கடினமாக இறங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விக்ரம் லேண்டரை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புகைப்படங்கள் நிலவின் மாலை நேரத்தில் எடுக்கப்பட்டதால், அதில் விக்ரம் லேண்டர் இருப்பது தெரியவில்லை. நிழல் படிந்துள்ள இடங்களில் லேண்டர் இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் மீண்டும் ஆர்பிட்டர் இதே இடத்திற்கு வரும் போது வெளிச்சம் இருக்கும் என்பதால், அப்போது கூடுதல் புகைப்படம் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’