’யோ- யோ-வில் தேர்ச்சி பெற மாட்டேன் என்றே நினைத்தார்கள்’: யுவராஜ் சிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

36 வயதில் என்னால் ’யோ யோ’ உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்றே இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் நினைத்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரித்துள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். அதிரடி வீரரான இவர், உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெற விரும்பு வதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், உலகக் கோப்பைக்கான அணியின் அவர் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.


Advertisement

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், ’’சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பின் நடந்த போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தேன். இருந்தும் அதற்குப் பின் என்னை அணியில் சேர்க்கவில்லை. என்னை நீக்குவார்கள் என்று நினைக்கவே இல்லை. அப்போது நான் காயமடைந்து இருந்தேன். பின்னர் இலங்கை தொடருக்கு தயாராகச் சொன்னார்கள். தயாராக இருந்தபோது, திடீரென்று, யோ யோ தகுதி தேர்வுக்கு வரச் சொன்னார்கள். என்னால் அதில் தகுதி பெற முடியாது என்றே நினைத்தார்கள். 36 வயதிலும் யோ யோ உடல் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றேன்.  தேர்வு பெறாமல் விட்டிருந்தால், என்னை வெளியேற்ற அது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், அதில் தேர்வு பெற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடச் சொன்னார்கள்.பிறகு என்னிடம் அணி நிர்வாகம் பேசவில்லை. நாட்டுக்காக 15-17 வருடமாக விளையாடிக்கொண்டிருக்கும் ஒருவரிடம், அது எந்த வீரராக இருந்தாலும் சரி, அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பதை யாரும் உட்கார்ந்து பேசவில்லை. எனக்கும் சரி, எனக்கு முன்னால் வீரேந்திர சேவாக், ஜாகிர் கான் ஆகியோரிடமும் ஓய்வு குறித்து யாரும் பேசவில்லை. நாங்கள் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம், அதனால் அணியில் சேர்க்க இயலவில்லை என்பதை உட்கார்ந்து பேசியிருந்திருக்கலாம். இந்திய கிரிக்கெட்டில் இது நடக்காத ஒன்று’’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement