கவுண்டமணியுடன் முதல் காட்சி - மலரும் நினைவில் நடிகர் சூரி

soori-shared-his-first-cinema-dialogue

நகைச்சுவை நடிகர் சூரி, தான் சினிமாவில் முதன்முதலில் வசனம் பேசிய காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 


Advertisement

‘வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்படத்தில், பரோட்டா சாப்பிடும் காட்சியின் மூலம் பிரபலமானவர்‌ நடிகர் சூரி. 'பரோட்டா' சூரி என்றே அறியப்படும் இவர், இளம்‌ தலைமுறை நடிகர்களுக்கு நண்பனாக நகைச்சுவை வேடங்‌களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாகவும் அறிமுகமாக இருக்கிறார்‌ சூரி. 


Advertisement

இவர், 2000-வது ஆண்டில் வெளியான ‘கண்ணன் வருவான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சினிமாவில் முதன்முதலில் பேசிய வசனம் என்றும், நடிகர் கவுண்டமணி, இயக்குநர் சுந்‌தர் சி ஆகியோருக்கு நன்றி எனவும் சூரி குறிப்பிட்டுள்ளார். சூரி திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்த நிலையில் இந்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார். 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement