8 வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

சென்னை பழைய மகாபலிபுர சாலை, துரைப்பாக்கத்தில் 13 அடுக்குகளை கொண்ட தனியார் அடுக்குகாடி குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் வெளிபுறத்தில் வர்ணம் பூசும் பணியானது இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் அதற்காக சாரம் கட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது 8 வது மாடியில் சாரம் அமைக்கும் பணியில் பாதுகாப்பு கயிறு கட்டாமல் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கிருந்து அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். 


Advertisement

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் திருவண்ணாமலையை சேர்ந்த பரூக் என்பதும் அவர் கடந்த 3 மாதங்களாக படூரில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement