நீட் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா, அவரது பெற்றோர் நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கியுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் உதித் சூர்யா தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது புதிய தலைமுறையின் களஆய்வில் அம்பலமானது. அவரது ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகினர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் செல்போன் டவர் மூலம் திருப்பதியில் இருந்த உதித் சூர்யாவையும், அவரது பெற்றோரையும் தனிப்படை காவல்துறையினர் பிடித்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து வந்து சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோருக்கு உடனடியாக தனித்தனியே சம்மன் வழங்கப்பட்டது. அதில், தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர்கள் தேனி அழைத்துச்செல்லப்பட்டனர். நாளை சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர். அப்போது மூன்றுபேரையும் ஒரே இடத்தில் அமர வைத்தும், பின்னர் தனித்தனியாகவும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக பல்வேறு கோணங்களில் கேள்விகளை தயார் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, எவ்வளவு பணம் கைமாறியது என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்ப உள்ளனர். உதித் சூர்யா உள்ளிட்ட மூன்றுபேரிடமும் பெறப்படும் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யவும் சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்