ஆளில்லா விமானத்தில் ஆயுத விநியோகம் - பாகிஸ்தான் மீது பஞ்சாப் முதல்வர் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை விநியோகித்து வருவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 


Advertisement

கடந்த ஞாயிறு அன்று பஞ்சாப் மாநிலம் தார்தரன் மாவட்டம், சோலா சாகிப் கிராமத்தில் நான்கு பயங்கரவாதிகள் காவல்துறையிடம் சிக்கினர். அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், செயற்கைகோள் தொலைபேசி, கள்ளநோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 


Advertisement

இதை பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இதேபோல் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை பாகிஸ்தான் விநியோகித்துள்ளதாக அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க பஞ்சாப் காவல்துறை முடிவு செய்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement