தோனியின் ஓய்வு குறித்து வீரர் யுவராஜ் சிங் கருத்து 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 


Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. இதற்குப் பிறகு இந்திய அணி கலந்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களுக்கான அணியில் முன்னாள் கேப்டன் தோனி இடம் பெறவில்லை. உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்து விடுவார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அத்துடன் முன்னாள் வீரர்கள் சிலர் தோனி ஓய்வு குறித்து விரைவில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.


Advertisement

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ தோனி இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். அவர் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் இன்னும் சில நாட்கள் விளையாட வேண்டும் என்று முடிவு எடுத்தால் அதையும் நாம் மதிக்கவேண்டும். 

மேலும் தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக் கூடாது. மகேந்திர சிங் தோனி ஒன்றும் உடனே உருவாகவில்லை. அவர் சிறந்த வீரராக உருவாக சில காலம் தேவைப்பட்டது. அதேபோல தோனிக்கு மாற்று வீரர் உருவாக சில காலங்கள் தேவைப்படும். இன்னும் டி20 உலகக் கோப்பைக்கு ஒராண்டு உள்ளது. அதனால் இன்னும் அதிக நேரம் உள்ளது. ரிஷப் பந்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் அவருக்கு சிறப்பாக விளையாட வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பது தவறு. ஏனென்றால் அவருக்கு நம்பிக்கை அளிப்பதன் மூலம் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்க முடியும். இதனைப் பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் கேப்டன்தான் செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement