கொடிய டெங்கு நோயில் இருந்து மக்களைப் பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேரைச் சேர்ந்த 6 வயது மகாலட்சுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ள ஸ்டாலின், இந்த ஆண்டும் டெங்குவைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உடனடியாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக மருத்துவ அணியினர் மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை