தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1969ஆம் ஆண்டு முதல் ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டு வருகிறது. சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் (2010), சிவாஜி கணேசன் (1996) இந்த விருதினை பெற்றுள்ளார்கள்.
2018ஆம் ஆண்டிற்கான விருதுக்கு அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன்னுடைய ட்விட்டரில், “திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படுகிறது. 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் பச்சனுக்கு விருது வழங்குவதால் ஒட்டுமொத்த நாடும், சர்வதேச சமூகமும் மகிழ்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations dear @SrBachchan ji !!! You richly deserve this commendable honour !!!! #DadaSahebPhalkeAward
— Rajinikanth (@rajinikanth) September 24, 2019Advertisement
இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெரும் மதிப்புக்குரிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தகுதியானவர் எனவும் அவருக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி