வெளிமாநிலத்தவர் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: வழக்கு தள்ளுபடி

Madurai-HC-reject-petition-about-medical-college-counsellig

வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவக் கல்லூரிக்கான கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.


Advertisement

மதுரையை சேர்ந்த சோம்நாத் நேயா உள்பட பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். அதில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவக் கல்லூரிக்கான கலந்தாய்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

கலந்தாய்வு முழுமையாக நிறைவடைந்த நிலையில், அதனை முழுமையாக ரத்து செய்து, புதிய கலந்தாய்வு நடத்துவது சாத்தியமல்ல என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. தேவைப்பட்டால், வெளிமாநிலத்தவரின் சான்றிதழ்களை அரசு சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement