வேட்பாளர் தேர்வு: ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் தொடங்கியது

dmk-by-election-candidate-interview-begins

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கியது.


Advertisement

விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் கொண்டவர்கள், அதற்கான விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து கள்ளக்குறிச்சி எம்பியும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதம் சிகாமணி மனு தாக்கல் செய்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் விக்கிரவாண்டி தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறும் எனவும் அவர் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.


Advertisement

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்த நா.புகழேந்தி, ரவி துரை உள்ளிட்டோரிடமும் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement