தேர்வுக்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தியதையும் மீறி செல்போன் எடுத்துச் சென்ற இளைஞர்களால் அவசியமில்லாத பணிச்சுமைக்கு ஆட்படுத்தப்பட்டனர் கடலூர் மாவட்ட காவல்துறையினர்.
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், மற்றும் தீயணைப்போருக்கான எழுத்துதேர்வு நடைப்பெற்றது. ஆறரை லட்சம் பேர் தேர்வுக்காக விண்ணபித்திருந்த நிலையில், கடலூரில் மட்டும் 27 ஆயிரத்தி 501பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்காக கடலூர் மாவட்டத்தில் 8 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக காலை முதலே தேர்வு மையங்களில் குவிய தொடங்கிய இளைஞர்கள், காவல்துறையின் அறிவிப்பையும் மீறி செல்போன்களை எடுத்து வந்திருந்தனர். இதனால் தேர்வுக்கு வந்திருந்த இளைஞர்களுடைய ஆயிரக்கணக்கான செல்போன்களை ஒவ்வொன்றாக பாதுகாக்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. தேர்வு நடைபெற்றது ஒன்றரை மணி நேரமாக இருந்தாலும் சேகரித்த செல்போன்களை உரியவர்களிடம் கொடுக்க 3 மணி நேரம் தேவைப்பட்டது. இதனால் காவல்துறையினருக்கு தேவையில்லாத பணிச்சுமை காவல்துறையினருக்கு ஏற்பட்டது. சட்டத்தை காக்கவும், காக்கி சட்டையை அணியவும் கனவோடு தேர்வு எழுதிய இளைஞர்கள் காவல்துறையினரின் அறிவுரையை ஏனோ மறந்துவிட்டனர். தேர்வுக்கு வருபவர்கள் இனிமேலாவது அறிவுறுத்தலை கடைபிடித்து அரசு ஊழியர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?