மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழகம் நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும், 25 ஆம் தேதி கடலோர மற்றும் தென்மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டதுடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான காற்று வீசும் என்பதால், மீனவர்கள் 2 நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
Loading More post
தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?
மதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாண நிகழ்விற்கு பின் பக்தர்களுக்கு அனுமதி!
கொரோனாவும் ஐந்து மாநில தேர்தலும்: அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” - இந்து சமய அறநிலையத்துறை
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!