ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிதம்பரத்திற்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஒரு பொறுப்புமிக்க குடிமகன், எம்.பி என்பதால் ஜாமீன் கிடைத்தாலும் தான் எங்கும் செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் ஐஎன்எக்ஸ் வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி