டி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி பாராட்டுத் தெரிவித்தார்.


Advertisement

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் குயின்டன் டி காக் 52 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். 
இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என்று சமனில் முடிந்தது. 


Advertisement

போட்டிக்குப் பிறகு பேசிய விராத் கோலி, ‘'உலகக் கோப்பைக்கு முன்பு வரை, டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வது என்று நினைத்தோம். அதன்படி செயல்பட்டோம். இதுபோன்ற முயற்சிகளில் எதிரான முடிவுகள் அமையும்போது அதற்கு ஏற்ற பதில்களை கண்டுபிடிக்க முடியும்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். முதல் இன்னிங்ஸில் பிட்ச் அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. டி-20 போட்டியை பொறுத்தவரை, ஒப்பீட்டளவில் சேஸிங் எளிதானது. மற்றப் போட்டிகளில், அதிக நேரம் நிலைத்து நின்று விளையாட பார்ட்னர்ஷிப் முக்கியம். இதில் 40-50 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்பது போட்டியை உங்களிடம் இருந்து பறித்துவிடும். அணியில் எங்களால் முடிந்த அளவு சரியான கலவையில் வீரர்களை தேர்வு செய்திருந்தோம். உள் ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்கள் சிறப்பாகவே செயல்பட் டார்கள். அவர்களுக்கு இன்னும் சில போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும்’’ என்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement