“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தரூர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் கூறியுள்ளார்.


Advertisement

புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், “கந்த 6 ஆண்டுகளாக நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம்?. புனேவில் மொஹ்சின் ஷேக் கொல்லப்பட்டார். பிறகு, மாட்டுக்கறி கொண்டு சென்றதாக கூறி முகமது அக்லக் கொல்லப்பட்டார். ஆனால், அது மாட்டுக்கறி அல்ல என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை அது மாட்டுக்கறியாகவே இருந்தாலும் ஒருவரை கொல்லும் உரிமையை யார் கொடுத்தது?. 

பால் பண்ணைக்காக பசுக்களை லாரியில் ஏற்றிச் செல்ல பெலு கானு லைசென்சு வழங்கப்பட்டிருந்தது. அவரும் அடித்துக் கொல்லப்பட்டார். ஒரு தேர்தல் வெற்றி எதனையும் செய்வதற்கும், யாரையும் கொல்வதற்கும் அதிகாரத்தை கொடுக்கிறதா?. ஜெய் ஸ்ரீராம் என்ற பெயரில் கொலைகள் செய்வது இந்து தர்மத்திற்கு எதிரானது. நான் ஒரு இந்துதான். ஆனால், அந்த வகையான இந்து அல்ல. 


Advertisement

                 

இதுதான் நம்முடைய பாரதமா? இதுதான் நம்முடைய இந்து தர்மம் சொல்கிறதா?. அடித்துக் கொல்கின்ற போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இது இந்து தர்மத்திற்கு அவமானம். அதேபோல், அவருடைய பெயரை சொல்லி கொலைகள் செய்வது கடவுள் ராமருக்கும் அவமானம்” என்று கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement