விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

உலகக் கோப்பை தொடருக்கு முன்பே தோனியின் ஓய்வு குறித்து விவாதங்கள் நடைபெற்று வந்தன. இருப்பினும், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அது தீவிரமடைந்தது. இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக, டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் தோனிக்கு இனி வாய்ப்பு இல்லையென பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.

                    


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிக்கப்படும் முன்பே, ராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாக கூறி இரண்டு மாதம் விடுப்பை அறிவித்தார். அதனால், வெஸ்ட் தொடருக்கான சிக்கில் தீர்ந்தது. இருப்பினும், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் வரவுள்ளது. மீண்டும் தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? அல்லது ஓரங்கட்டப்படுவாரா? என்பது குறித்த பேச்சுகள் அடிபட தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், தோனி தன்னுடைய விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் ஹசாரே டிராபி மற்றும் பங்களாதேஷ் டி20 தொடரில் அவர் விளையாட மாட்டார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் விளையாடுகிறது. அந்தப் போட்டியில் தோனி விளையாட வாய்ப்புள்ளது.

             


Advertisement

இதுகுறித்து கவாஸ்கர் கூறிய போது, “தோனியில் மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அவர்தான் தன்னுடைய எதிர்காலம் குறித்து தெளிபடுத்த வேண்டும். அவருக்கு தற்போது 38 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெறும் போது அவருக்கு 39 வயது ஆகிவிடும் என்பதால் மாற்று வீரரை இந்திய அணி யோசிக்க வேண்டும்” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement