பார்வையற்ற நபருக்கு வாய்ப்பு தருவதாக கூறியுள்ள இசையமைப்பாளர் இமானுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்
சமூக வலைத்தளங்கள் பல திறமையானவர்களை வெளியே கொண்டு வருகிறது. டிக்டாக் மூலம் புகழ்பெற்று திரைப்படங்களில் பலர் நடிக்கிறார்கள். சிலர் விளையாட்டாக பாட்டுப்பாடி வெளியிடும் வீடியோ வைரலாகியும் வருகிறது. சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மண்டல் பாடிய பாடல் வைரலாகி, அவர் தற்போது பாலிவுட்டில் பாடகியாகியுள்ளார். அதே போல் உபர் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பாட்டு பாடும் வீடியோ வைரலானது. இந்நிலையில் தமிழகத்திலும் அதேபோல் ஒரு பாடகரை கண்டுபிடித்துள்ளது சமூக வலைதளம்.
கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை தன் செல்போனில் படம் பிடித்த ஒருவர், இசையமைப்பாளர் இமானுக்கும், பாடகர் சித் ஸ்ரீராமுக்கும் டேக் செய்து ட்வீட் செய்தார்.
இதனைக் கண்ட இமான், அவருடைய விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார். அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி. விரைவில் அவரை பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல் பாடகர் சித் ஸ்ரீராமும் திருமூர்த்தி குரல்வளத்தை பாராட்டியுள்ளார்.
Dear Online World! Kindly share this talent’s contact pls
Loading More post
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!