நாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் 

Interview-with-AIADMK-candidates-on-monday

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


Advertisement

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

திமுக கூட்டணியை பொறுத்தவரை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிட முடிவு செய்துள்ளது. விக்ரவாண்டி தொகுதிக்காக, நாளை மறுநாள் திமுக சார்பில் விருப்ப மனு பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் செப்டம்பர் 23 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் எனவும் விருப்பமனு அளிக்கும் கழக நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement