அடையாளம் தெரியாத நபர்களால் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு டெல்லியின் பட்பார்கஞ் பகுதியில் உஷா என்ற பெண் வசித்து வந்தார். இவர் இன்று அதிகாலை தனது காரில் வெளியே சென்றுள்ளார். காலை 6.30 மணியளவில் இவரது கார் அப்பகுதியிலுள்ள கோயில் ஒன்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வந்துள்ளனர்.
அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாகியை வைத்து காரில் அமர்ந்திருந்த உஷாவை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி அப்பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!