பயணிகளே இல்லாமல் 46 விமானங்களை இயக்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பயணிகளே இல்லாமல் சர்வதேச தடத்தில் செல்லும் 46 விமானங்களை, அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் இயக்கி இருக்கும் தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.


Advertisement

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA ) நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமான நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. ’


Advertisement

இந்நிலையில், அரசுக்கு சொந்தமான அந்த விமான நிறுவனம் 2016-17 ஆம் ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு செல்லும் 46 விமானங்களை பயணிகளே இல்லாமல் இயக்கி இருப்பது மத்திய தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால் 180 மில்லியன் பாகிஸ்தான் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ், உம்ரா வழி விமானங்களும் பயணிகளே இல்லாமல் இயக்கப்பட்டிருக் கிறது. இதுபற்றி விமான நிர்வாகம் அரசுக்கு தெரிவித்தும் அது பற்றி விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்பட் டுள்ளது.

பொருளாதார பிரச்னை காரணமாக சுமார் ஆயிரம் பணியாளர்களை கடந்த மாதம் பி.ஐ.ஏ பணிநீக்கம் செய்ததது குறிப்பிடத் தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement