நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்

நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்
நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 

கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதால் அந்த தொகுதியும் காலியானது. இந்நிலையில் இந்த தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி இன்று அறி விக்கப்பட்டுள்ளது. 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி, 
அக்டோபர் 21 ஆம் தேதி இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது.

செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள், செப்டம்பர் 30 ஆம் தேதி. வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3 ஆம் தேதி கடைசி நாள். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 24 ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com