வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் நீதிபதி - சிசிடிவி காட்சிகள் 

---All-3-of-them-attacked-me-----Daughter-in-law-of-retd-HC-judge-on-domestic-violence-video

வரதட்சணை கேட்டு ஹைதராபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, குடும்பத்தினருடன் சேர்ந்து மருமகளை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்‌ளன.


Advertisement

ஹைதராபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமமோகன ராவின் மகன் வஸிஸ்தா, சிந்து ஷர்மா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியதாக‌க் கூறப்படுகிறது. 

கணவர் வஸிஸ்தா மட்டுமல்லாது தமது மாமனாரான முன்னாள் நீதிபதி ராமமோகன ராவ், மாமியார் துர்கா ஜெயலட்சுமி ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக சிந்து ஷர்மா புகார் அளித்தார். 


Advertisement

 

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கணவர் குடும்பத்தினரால் சிந்து ஷர்மா தாக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தாய் தாக்கப்படுவதை கண்டு குழந்தை காலைப்பிடித்து அழுத போதிலும், அவரது மாமனார் ராமமோகன ராவ் கொடூரமாக தாக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று‌ள்ளன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement