தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்

cbi-submit-statement-about-thuthukudi-gunshoot

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை சீலிட்ட கவரில் சிபிஐ இயக்குநர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.


Advertisement

சிபிஐயின் இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்," தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியும், 4 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 

அதனடிப்படையில் அக்டோபர் 8ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில், 100 ஆவணங்களுக்குப் பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  


Advertisement

துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே அதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ இயக்குநர் தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை சீலிட்ட கவரில்  தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement