சென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 


Advertisement

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன் (25). நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த இவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தலை, உடம்பு, கை மற்றும் கால்களில் வெட்டிக்கொலை செய்தனர். அத்துடன் தலையை பிளந்து மூளையை தனியாக ஒரு தட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். \


Advertisement

இதுதொடர்பாக தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஹரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்ட ஹரி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலால் ஹரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ‘பல்பு’ என்று அழைக்கப்பட்ட குமார் என்பவரை ஹரி வெட்டியதாக தெரிகிறது. இதற்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு ஹரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகித்துள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement