கார்ப்ரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன் - பங்குசந்தை கிடுகிடு உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


Advertisement

இந்தியப் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளதாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொருளாதாரத்தின் இந்த மந்த நிலை, இயல்பான ஒன்று தான் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 5 ஆண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 ட்ரில்லயன் டாலராக கொண்டு வருவதே இலக்கு என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வருகிறார். ஏற்கெனவே பல சலுகைகள் தொழில் முனைவோர்களுக்கு அறிவித்துள்ள அவர், தற்போது மேலும் சில சலுகைகளை அறிவித்துள்ளார்.


Advertisement

அதன்படி, வரும் அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனங்களுக்கான விதிக்கப்பட்டு வந்த கார்ப்ரேட் வரி என்றழைக்கப்படும் வருமானவரி 22 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் எதிரொலியாக, இந்தியப் பங்குசந்தைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. மும்பை பங்குசந்தை குறியீடுடான சென்செக்ஸ் 872.52 புள்ளிகள் உயர்ந்து 36,966 புள்ளிகளை எட்டியிருக்கிறது. தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 246.50 புள்ளிகள் உயர்ந்து 10,948 புள்ளிகளில் இருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement