’நான் கிரிக்கெட் ரசிகன் இல்லை என்றாலும் எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிடிக்கும்’ என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்தார்.
நடிகர் துல்கர் சல்மான், சோனம் கபூருடன் நடித்துள்ள இந்தி படம், ‘த ஸோயா ஃபேக்டர்’. இன்று ரிலீஸ் ஆகியுள்ள இந்தப் படத்தில் சர்வதேச போட்டியில் ஆடும் கிரிக்கெட் வீரராக அவர் நடித்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ’இதில் கிரிக் கெட் வீரராக நடித்திருந்தாலும் எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. நான் எந்த விளையாட்டின் ரசிகனும் இல்லை. பள்ளியில் படிக்கும்போது, விளையாட்டை சீரியசாக பார்க்கும் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால், நான் அப்படியில்லை.
கிரிக்கெட்டை இப்போதும் என் நண்பர்கள் பார்ப்பார்கள். நான் அதற்காக டிவியை ஆன் செய்ய மாட்டேன். ஆனால், இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்தபோது, கிரிக்கெட்டின் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டேன். அவர்களின் கடின உழைப் பையும் பயிற்சியையும் அறிந்தபோது இது வித்தியாசமான ஆட்டம் என்பதை உணர்ந்தேன்.
இந்தி சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்குமான வித்தியாசம் பற்றி கேட்கிறீர்கள். பட ரிலீஸுக்கு முன்பான புரமோஷ ன்கள், இந்தி சினிமாவில் அதிகமாக இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் அது குறைவுதான்’’ என்றார்.
Loading More post
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!