சூனியம் வைத்து பெண்ணை கொன்றுவிட்டதாக சந்தேகித்து இளைஞர் ஒருவரை சிதையில் பிடித்து தள்ளிய சம்பவம் நடந்தேறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஷமீர்பேட் பகுதியின் அதரசப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கயாரா லக்ஷ்மி (45). இவர் உடல்நலக் குறைவால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் போயினி ஆஞ்சநேயலு (25) இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்துள்ளார்.
அந்தச் சமயத்தில் லக்ஷ்மியின் மரணத்திற்கு ஆஞ்சநேயலு வைத்த செய்வினைதான் காரணம் எனக் கூறி அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவரை லக்ஷ்மியின் சிதைக்கு வைக்கப்பட்டிருந்த தீயில் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஆஞ்சநேயலு நெருப்பில் கருகி உயிரிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'