கோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி பாராட்டி உள்ளார். 


Advertisement

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். இவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். அத்துடன் இந்திய அணி இந்தப் போட்டியை வெற்றிப் பெற்றது. 


Advertisement

இதன்மூலம் இந்தாண்டு ஒருநாள்,டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 50க்கும் மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்தது. அதில், விராட் கோலி மீண்டும் அனைத்து வகையான போட்டிகளிலும் 50க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 60.31, டெஸ்ட் போட்டியில் 53.14, டி-20 போட்டியில் 50.85 என்ற சராசரியை விராட் கோலி இந்தாண்டு வைத்துள்ளார். 

இந்நிலையில் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், “வாழ்த்துகள் விராட் கோலி. நீங்கள் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர். நீங்கள் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். அத்துடன் உங்கள் ஆட்டத்தின் மூலம் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement