பிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடி பயணிக்கும் சிறப்பு விமானம் பாகிஸ்தான் வான்பரப்பின் வழியே பறக்க அனுமதி மறுத்திருப்‌பதற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. 


Advertisement

வரும் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் பாகிஸ்தான் வான்பரப்பின் வழியே செல்ல அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்து சென்றபோதும், அவரது சிறப்பு விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்தது. 


Advertisement

அடுத்தடுத்து இந்திய தலைவர்களின் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படாததற்கு, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 2 வாரங்களில் 2 முறை பாகிஸ்தான் இவ்வாறு நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளா‌ர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement