பேஸ்புக்கில் தற்கொலை போஸ்ட்: டாக்டரை காப்பாற்ற நள்ளிரவில் நடந்த பரபரப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பேஸ்புக்கில் தற்கொலை செய்யபோவதாக டாக்டர் ஒருவர் எழுதிய பதிவை அடுத்து, போலீசார் அதிரடியாகச் செயல்பட்ட சம்பவம் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.


Advertisement

மும்பையில் பிரபல மன நலமருத்துவராக இருப்பவர் டாக்டர் ஸ்வப்னா பட்கர். இவரது பேஸ்புக்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை, அதாவது 1.30 மணிக்கு ஒரு பதிவு இடம்பெற்றிருந்தது. இவரது நட்பு வட்டத்தில் இருக்கிற பிரபல பின்னணி பாடகி அக்ரிதி காக்கர் தற்செயலாக அந்த நேரத்தில் பேஸ்புக்கைப் பார்த்தார். அந்தப் பதிவைப் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி. ஏனென்றால், ‘ஓவர் டார்ச்சரால் அவதிப்படுகிறேன். அதிகமான மன உளைச்சல். இனியும் வாழ முடியாது. தற்கொலை செய்துகொள்கிறேன். குட்பை’ என்று டாக்டர் ஸ்வப்னா எழுதிருந்தார்.

படபடப்பான காக்கருக்கு, இந்த நேரத்தில் யார் விழித்திருப்பார்கள் என்று சந்தேகம். உடனடியாக அந்தப் பதிவை தனது பக்கத்தில் ஷேர் செய்த அவர், ‘யாராவது காப்பாற்றுங்கள்’ என்று எழுதியிருந்தார். அந்த நேரத்திலும் பலர் விழித்திருந்தது ஆச்சரியம். டாக்டருக்கு வேண்டிய சிலர் இதைப் படித்துவிட்டு அவருக்கு ஃபோன் செய்தனர். போன் நாட் ரீச்சபிளில் இருந்தது. பாடகி அக்ரிதி மும்பை போலீசுக்கும் போலீஸ் கமிஷனரின் டிவிட்டரிலும் தகவலைப் பகிர்ந்தார். போலீசாரும் பேஸ்புக்கில் அந்த தகவலை போஸ்ட் செய்து, தெரிந்தவர்கள் முகவரி தெரிந்தால் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தனர். ஒரு மாணவன் போலீசுக்கு அட்ரஸ் கொடுத்தான்.


Advertisement

வகோலாவில் அவரது வீடு இருந்தது. வீட்டைக் கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று கதவைத் தட்டினர். ஆனால், சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தார் டாக்டர் ஸ்வப்னா. நள்ளிரவில் நடந்த களேபரத்தை போலீஸ் விளக்கிய பிறகுதான் அவருக்கு விஷயமே தெரிய வந்திருக்கிறது. பிறகு அவர் பேஸ்புக்கை திறந்தால், அது ஹேக் செய்யப்பட்டிருந்தது. அவர் பேஸ்புக் அக்கவுண்டை ஹேக் செய்து யாரோ விஷமிகள் இப்படி செய்திருப்பது அவருக்கு தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் கூறும்போது, ’நள்ளிரவிலும் பாடகி அக்ரிதி இப்படி செயல்பட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று’ என்று கூறினர். அக்ரிதி கூறும்போது, ‘இவ்வளவு வேகமாக செயல்பட்டு உண்மையை கண்டறிந்த போலீசுக்கு சல்யூட்’ என்று தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement