நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ? - விசாரணைக்கு அனுப்பிய மருத்துவக் கல்லூரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் தேர்வில் மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர் மீதான புகாரைத் தொடர்ந்து ஆவணங்களை சுகாதாரத்துறை இயக்குநரின் ஆய்வுக்கு மருத்துவத் கல்லூரி  அனுப்பியது. ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பதால் மருத்துவக் கல்லூரி விசாரணைக்கு அனுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நுழைவுத் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் நடந்ததா என சந்தேகம் எழுந்துள்ளது. 


Advertisement

புகாருக்குள்ளான மாணவர் சென்னையில் இருமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. மாணவர் மீதான புகாரைத் தொடர்ந்து ஆவணங்களை சுகாதாரத்துறை இயக்குநரின் ஆய்வுக்கும் மருத்துவக் கல்லூரி அனுப்பியுள்ளது. ஆள்மாறாட்ட சந்தேகம் எழுந்தபின் சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவக் கல்லூரிக்கு வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புகைப்பட வேறுபாடு தொடர்பாக மாணவரின் தாயை தொடர்புகொண்டபோது, முரண்பட்ட தகவல்களை தெரிவித்திருக்கிறார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement