கோவை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் சிறுமி, சிறுவன் என இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை அக்டோபர் 16 வரை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 


Advertisement

2010 ஆம் ஆண்டு பணத்துக்காக கடத்திச் செல்லப்பட்ட சிறுமி பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தம்பியும் அப்போது கடத்திக் கொல்லப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ‌ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் மனோகரன் என்பவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி, அவர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், அக்டோபர் 16 ஆம் தேதி வரை தூக்குதண்டனையை நிறைவேற்ற தடை விதித்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement