மதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது

police-arrested-vijay-fan-in-sellur

மதுரையில் உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் ஜெயகார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 


Advertisement

மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் செல்லூர் பகுதியில் போஸ்டர் ஒட்டியதாக தெரிகிறது. இதையடுத்து உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக அம்மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட இரண்டு பேர் மீது செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் விஜய் ரசிகரான ஜெயகார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். சதீஸ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 


Advertisement

முன்னதாக சென்னையில் சில தினங்களுக்கு முன் சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் இனி பேனர் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிவுறுத்தினர். அந்த வகையில், நடிகர் விஜய்யும் அவரது ரசிகர்களுக்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என அறிவுறுத்தியிருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement