இந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்

stalin-protest-announce-against-hindi-force

இந்தி மொழியைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளைக் கண்டித்து, வரும் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென திமுக அறிவித்துள்ளது.


Advertisement

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்தியாவை இந்தி இணைக்கும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 


Advertisement

பல்வேறு துறைகளில் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சி, நாட்டின் பன்முகத்தன்மைக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படை நோக்கத்திற்கும் எதிரானது என சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திட, வரும் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், தமிழ் உணர்வு கொண்ட சான்றோர் மற்றும் ஆன்மிக வழிநடப்போரையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement