பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் ராகுல்காந்தி மொழி சர்ச்சை குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, ஆங்கிலம், உருது என 23 மொழிகளை தேசியக்கொடி எமோஜியுடன் குறிப்பிட்ட ராகுல், பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல என தெரிவித்துள்ளார்.
Loading More post
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி