ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திரப் பிரதேச சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவ பிரசாத் தற்கொலை செய்து கொண்டார்.


Advertisement

என்.டி.ராமா ராவ் தெலுங்கு தேசம் கட்சியை 1983 ஆம் ஆண்டில் துவங்கியதில் இருந்து அக்கட்சியில் இருந்து வந்தவர் கோடெலா சிவ பிரசாத் ராவ்.  6 முறை எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற்றவர். மாநில உள்துறை அமைச்சர், சுகாதாரத்துரை அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். தெலங்கானா பிரிந்த பின்னர், 2014ம் ஆண்டில் இவர்தான் சபாநாயகராக இருந்தார்.

     


Advertisement

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் காலை உணவு எடுத்துக் கொண்ட பின்னர் தன்னுடைய அறைக்கு சென்ற சிவபிரசாத் திரும்பி வரவேயில்லை. நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிவ பிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் ராவின் மறைவுக்கு ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்திரன், முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

           


Advertisement

கோடெலா சிவபிரசாத், அவரது மகன் மற்றும் மகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், மகள் மற்றும் மகனு ஜாமீன் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் அவர் சமீப காலமாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மீதும் அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். தன்னுடைய மன அழுத்தத்திற்கு ஆளும் அரசுதான் காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement