10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேல்நிலை வகுப்புகளைத் தொடர்ந்து 10-ஆம் வகுப்பிலும் இருதாள்களாக நடத்தப்பட்ட மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை ஆசிரியர் கூட்டமைப்பினர் எதிர்க்கின்றனர்.


Advertisement

புதிய பாடத்திட்ட அறிமுகத்திற்கு பிறகு 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாட இருதாள் தேர்வுமுறையை ஒரே தாளாக்கி அறிவித்தது தமிழ்நாடு அரசு. அப்போதே, மொழித்தாள்களுக்கான முக்கியத்துவம் குறைவதாக கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது 10ஆம் வகுப்பிற்கு மொழிப்பாடம் ஒரே தாளாக்கப்பட்டிருப்பதை ஆசிரியர்கள் பலர் எதிர்க்கின்றனர்.


Advertisement

கல்வியாண்டின் நடுவில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மொழித்தாள் மதிப்பெண்களின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை என்பதால், இந்த மாற்றத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பிற்கானதாக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கான கல்வியாக பார்க்கப்படும் மொழித்தாள்கள் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு அந்தப் பலன்களை தராமல் சென்றுவிடக்கூடாது என்பதையும் பள்ளிக் கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement