வேன் கவிழ்ந்து சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவகாசி அருகே பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உட்பட, மூவர் உயிரிழந்தனர்.


Advertisement

சூரநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் சல்வார்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்வதற்காக இன்று காலை வேனில் சென்றனர். தாயில்பட்டி சுப்பிரமணியாபுரம் வளைவு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, வளைவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், நிகழ்விடத்திலேயே சின்னபாண்டி என்ற சிறுவனும், குருமூர்த்தி என்பவரும் உயிரிழந்தனர்.


Advertisement

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் ராஜா என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேருக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement